>

Thursday, April 16, 2009

புரிந்துகொள்ள முடியவில்லை

சில சமயங்களில், வலைப்பூ பட்டறைகளுக்குப் போயிருக்கலாமே என்று வருத்தப்படும்படியாக ஏதாவது நடந்துவிடுகிறது. நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்து ஒரு வலைப்பூவை ஆரம்பித்தோம். அதில் பதிவுகளை இட்டோம். தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுக்கவும் செய்தோம். அதென்னவோ தெரியவில்லை... தமிழ்மண முகப்பில் சிறிது நேரமே பதிவு தெரிந்தது. பிறகு மறைந்தே போயிற்று. என்னவாயிற்று என்றே தெரியவில்லை. தவிர, கடைசியாக இட்ட இடுகை மட்டுமே தமிழ்மணத்தில் தெரிகிறது. ஏனையவைகளுக்கு கருவிப்பட்டையில் 'அனுப்பு'என்பதையே காணவில்லை. எங்கேயென்று அனுப்புவது:( என்னமோ ஒன்றும் புரியவில்லை. இந்தப் பதிவைக்கூட ஒரு பரீட்சார்த்தமாகவே இட்டுப்பார்க்கிறேன். வாங்க. ... வந்து ஏதாவது வழி சொல்லிவிட்டுப் போங்க.

-தமி்ழ்நதி

7 comments:

Thamiz Priyan said...

தமிழ் மணத்தில் வந்து விட்டதே.. :) வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

//தமிழ் மணத்தில் வந்து விட்டதே.. :) வாழ்த்துக்கள்!//

yes :-)

and my wishes too

Unknown said...

பதிவு தெரிகிறதே!

எனக்கும் ஒரே ஒரு முறை இந்தப் பிரச்னை வந்தது வந்தது.ஏன் தடுமாறுகிறேம்? குழப்பம்.

//உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க//
நேரடியாக இணைக்கலாமா?

//ப்ளாகருக்கான பதிவுப்பட்டை//
இது என்ன? பதிவுப் பட்டை இருந்தால்தான் இணைக்க முடியுமா?நேரடியாக இணைக்க முடியாதா? குழப்பம்?

நான் முறையிட்டேன்.பதிலில்லை.

தமிழ் மணத்தில்(பதிவு இணைக்கும்) விதி மற்றும் செயல் முறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.It should be userfriendly.அதாவது ஆ முதல் அக்கு வரை ஒரு flow chart,.

அடுத்து ”அவ்வப்பொழுது எழும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் என்ன செய்யவேண்டும்,எங்கு போய் “ஆராய்ச்சி மணி” அடிக்க வேண்டும்.touble shooting process.

அடுத்து பதிவர்களும் ஒரு ஒழுங்குமுறையை பின் பற்ற வேண்டும்.”ஆச்சா போச்சா” என்று இருக்கக் கூடாது.கொஞ்சமாவது மென் பொருள் தெரிந்திருக்க வேண்டும்.சில சமயங்களில் புத்திசாலித்தனமாக
மென் பொருளைக் கையாள வேண்டும்.



நான் என் அனுபவத்தில் கண்டது.

உங்கள் பிரச்ச்னைக்கு தமிழ் மணத்தை அணுகுக.

நன்றி.

(ஏதோ திட்டுவது மாதிரி காதில் விழுகிற்து)

தமிழன்-கறுப்பி... said...

இப்பொழுது வருகிறதே...

அத்தோடு இப்பொழுதெல்லாம் தமிழ் மணத்தில் வருகிற பதிவுகள் கூட கொஞ்ச நேரம்தான் முகப்பிலிருக்கிறது- அவ்வளவு பதிவர்கள்...

வாழ்த்துக்கள் இரண்டு பெரும் கவிஞர்கள் கூடியிருக்கிறீர்கள்...

நிறைய எதிர்பார்க்கிறேன்...!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் !

குட்டி ரேவதி, தமிழ்நதி said...

ஆம் வந்துவிட்டது. நன்றி தமிழ்ப்பிரியன், சென்ஷி, கே.ரவிஷங்கர், தமிழன் - கறுப்பி, ஆயில்யன்.

"அடுத்து பதிவர்களும் ஒரு ஒழுங்குமுறையை பின் பற்ற வேண்டும்.”ஆச்சா போச்சா” என்று இருக்கக் கூடாது.கொஞ்சமாவது மென் பொருள் தெரிந்திருக்க வேண்டும்.சில சமயங்களில் புத்திசாலித்தனமாக
மென் பொருளைக் கையாள வேண்டும்."

வழிமொழிகிறேன். நான் பழைய ஞாபகத்தில் body, item page எல்லாம் போய்த் துளாவிப் பார்த்துவிட்டு வந்தேன். ஆனால், தமிழ்மணத்தினர் பதிவுப்பட்டையை இணைக்கும் வழியை இலகுசெய்திருப்பதைப் பிறகுதான் 'கண்டு'பிடித்தேன். http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html இங்கே போய் நமது வலைப்பக்கத்தின் வார்ப்புருவிலுள்ளதைப் பிரதி செய்து ஒட்டிவிட்டு, கீழேயுள்ள 'அளி'யை அழுத்தினால் அதுவாக இணைத்துக்கொண்டுவந்து கையில் தருகிறது. அதை எடுத்துக்கொண்டுபோய் நமது வார்ப்புருவில் ஏற்கெனவே இருப்பதை அழித்துவிட்டு, புதிதாகக் கிடைத்ததை ஒட்டவேண்டும். (நன்றாகக் குழப்புகிறேன் என்று மட்டும் தெரிகிறது.) இப்படித்தான் நமக்கு விளங்கும். விளங்கப்படுத்தத் தெரியாது:)

தமிழன்-கறுப்பி,

"வாழ்த்துக்கள் இரண்டு பெரும் கவிஞர்கள் கூடியிருக்கிறீர்கள்..."

இப்படி யாராவது சொன்னால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், உண்மை என்று ஒன்று உண்டல்லவா? நானெல்லாம் பெரிய கவிஞர் இல்லை. (சின்னக் கவிஞரும் இல்லை) குட்டி ரேவதி மிக அறியப்பட்ட ஒருவர். அவரோடு எழுதும் வாய்ப்புக் கிடைத்ததையிட்டு எனக்கு மகிழ்ச்சியே. அவருக்கு இன்னும் வலைப்பூ உத்திகள் பிடிபடவில்லை. அதனால் உடனடியாக மறுத்து ஒன்றும் சொல்லமாட்டார்:) 'இப்படி ஆளையாள் புகழ்ந்துகொண்டிருந்தால் எப்படி?'என்று ஓரிரு நிமிடங்களுக்கு முன்னர்தான் அவரிடம் கேட்டிருந்தேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ் மணத்தில் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்

Post a Comment