>

Friday, May 22, 2009

குருவிகள் போயின போயின


அடர்ந்த கரும்புதருக்குள்ளிருந்து குருவிகள் பறந்துபோயின
அதிகாலை மின்னும் சிறகுகளுடனும் குறுந்தலைகளுடனும்

எனது தலையை அவற்றின் பறத்தலுக்காகத் திறந்து கொடுத்தேன்
ஒன்றாகி இரண்டாகி நூறாகி ஆயிரமாகிக் கலைந்தன

ஒடுங்கி வியர்த்திருந்த உடலும் சிறகுகளும் சுவாசிப்பதற்காக
விண்ணெங்கும் அலைந்து கொண்டேயிருந்தன ஒரே குருவியாகி

புதருக்கு அடியில் கும்மிருட்டு மூடிக்கொண்டிருந்தது இரத்தச்சகதியான
என் ஈரநிலத்தையும் பறக்கமுடியாத குஞ்சுகளையும்

ஊழியின் பெருவலி என்னகத்தே உள்ளது என்பதால் இன்னும் உறங்காமல் இருக்கின்றன குஞ்சுகளும் கனவுகளும் புதருக்குளே

குட்டி ரேவதி

2 comments:

நாதாரி said...

!!!!

ஆ.சுதா said...

கவிதை படித்தேன் எனக்கு புரிந்தும் புரியாமலும்
ஏதோ ஓர் ஈர்ப்பு மட்டும் கவிதையில் கட்டிப் போடுகின்றது.

Post a Comment